Thursday, 31 July 2014

கடைசி தலைமுறை



கடைசி தலைமுறை

1.ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும்நாமதான்

2.செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

3.மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!

4.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

5.மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான்இருக்கும்.

6.வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

7.தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும்தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான்இருக்கும்.

8.கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

9.காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்துதிரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

10.
நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

11.மாமா பொண்ணு ,அத்தை பொண்ணு என ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க புடை சூழ வந்த கடைசி தலைமுறைநம்மளாதான் இருக்கும்

12.10th 12th ரிசல்ட் பேப்பர்  பார்த்த கடைசி தலாமுறை நாம தான்

13.வெட்கப்படுற பொண்ணுங்களை பார்த்த கடைசி தலைமுறை நாமதான்...

14.கதவு வச்ச டிவி  பாத்த கடைசி தலைமுற நாம தான்

15.ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான்.

16.சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறை தான்.

17.போஸ்ட் கார்டு  ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்

16.ஜவ்வுமிட்டாயில் வாட்ச் கட்டினது நாம் படித்த புத்தகத்தை விற்று அதில்    
  வரும் பணத்தை  அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது,  
  கோனார் தமிழ் உரை, வெற்றி அறிவியல் உரை  இதெல்லாம் போச்சு.

18.நொண்டிகிட்டிப்புள்பம்பரம்கண்ணாம்பூச்சிகோலி போன்ற பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி 
   
தலைமுறை நாம்தான்...

19.5,10,20,25 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,

20.மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை
 
இதையெல்லாம் படிக்கும்போது சிறுதுளி கண்ணில்எட்டி பார்ப்பதும்அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்.


Saturday, 26 July 2014

Be Happy


நீங்கள் ஒரு நல்ல  மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைக்கிறீர்களா அவை ஒன்றோடொன்று தொடர்பு உள்ளவை. நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்றால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.  நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும்.
ஒரு நல்ல வாழ்க்கை என்பது முன்னணி பணக்காரர்களுக்கு மட்டுமே உரியது அல்ல. உண்மையில், நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கை என்பது அதிகமான பணத்துடன் இருப்பது அல்ல.  நிச்சயமாக, பணம் முக்கியம். ஒரு பகட்டான வாழ்க்கை வாழ இல்லை என்றாலும், குறைந்தது உணவு, தண்ணீர், தங்குமிடம், உடைகள், , கல்வி, பொருள் போன்ற வாழ்க்கையின் தேவைகளை, பெற. நிச்சயமாக மகிழ்ச்சி மற்றும் ஒரு நல்ல வாழ்க்கைக்கு  பணம் ரு அளவுகோல் அல்ல. உலகில் உள்ள அனைத்து பணமும் உங்களிடம் இருக்கிறது என்றாலும், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது .நீங்கள் நல்ல ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால், நீங்கள்   வாழ்வதற்க்கு  தேவையான அனைத்தையும் மகிழ்ச்சியாக செய்ய வேண்டும்.  ங்ளாள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் வழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது. நீங்கள் ஒரு நல்ல மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ ஆரம்பித்தால் சின்ன சின்ன விசயங்களிள் கூட நீங்கள் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.