Thursday, 10 September 2015

கனவு




கனவு


எங்கள் கல்லுரியில் முதலாம் ஆண்டு மாணவரை சேர்க்க வந்த பெற்றோரும் அவருடன் வந்தவரும் பேசிக்கொண்டு சென்ற வார்த்தை ஏற்ப்படுத்திய தாக்கமே இந்த பதிவு.
  “ ஏன் கவலை படுர உன் கனவை பையன் கண்டிப்பா நிறவேற்ற போறான்.
                இதுவே அந்த வார்த்தை.  என்னுடைய புரிதல் “ அப்பா அவருடைய மகனை பொறியாளனாக ஆக்குவதே அவருடைய கனவு, ஆனால் கல்வி கட்டணம் அதிகம் அதை எப்படி சமாளிப்பது என்ற கவலை அதற்க்காக அவருடன் வந்தவர் இதை சொல்லி இருக்ககூடும். “
    
அவருடைய கனவு நியாயமானதா ?
கனவு என்பது அவரவர்களுடைய ஆழ்மனது ஆசையே. அந்த ஆசை எப்பொழுதும் அந்த தனிப்பட்ட மணிதன் சம்மந்த பட்டதாகவே இருக்கும். அதை அடைய வேண்டும் என்பதுவும் அவருடைய தனிப்பட்ட விசயமாக மட்டுமே இருக்குமானால் யாருக்கும் தொல்லை இல்லை. அதுவே பிறர் சம்மந்த பட்டதாக இருந்தால் அது நன்மை பயக்குமேயானாலும் நியாயமானதாக இருக்க முடியுமா?.
அவனுடைய கனவை அவன் மகன் நிறைவேற்றுவான், மகனுடைய கனவை அவனுடைய மகன் நிறைவேற்றுவான் , இந்த தொடர் என்று நிறைவடையும், ஏன் இந்த நிலை? அவரவர் கனவுகளை அவரவரே நிறைவேற்ற முடியாதா? என்று அந்த நிலை ஏற்ப்படும்?

இந்த இடத்தில் ஒரு விசயத்தை நினைத்து பார்க்கின்றேன் , குழந்தைக்கு உடல் நலம் சரி இல்லை என்றல் தாய் கடவுளிடம் தன்னுடைய குழந்தைக்கு உடல் நலம் சரியாகி விட்டால் தன்னுடைய குழந்தைக்கு மொட்டை அடிப்பதாக பிராத்தனை செய்வார்கள். இது போன்ற நிகழ்வுகள் சாதாரனமாக ஏற்றுக்கொள்ள பட்ட்தாக இருப்பினும் வேண்டுகோள் வைப்பவரே அதை நிறைவேற்ற வேண்டிய கடைமை பெற்றவர் ஆகிறார், இங்கு தாயே தன் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டிய கடைமை பெற்றவர் ஆகிறார். குழந்தை சிறியாதாக இருந்தால் சரி சற்று வளர்ந்த குழந்தையாக இருப்பின் கக்ஷ்டம் தாயிக்கே.

ஒவ்வொறுவரும் காணும் கனவும் எத்தகயது , தன்னுடைய ஆசை சம்மந்த பட்டது, அந்த ஆசையில் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை சேர்த்து கொள்வது தவறு ஒன்றும் இல்லை. ஆனால் அந்த ஆசை தன்னுடை எதிர்காலம் மட்டும் அன்றி அடுத்தவருடைய எதிர்காலமும் சம்மந்த பட்ட்தாக இருப்பின் அந்த கனவை நினைவாக்க வேண்டிய அவசியம் அடுத்தவருக்கு தேவையா?.

பலஆண்டுகளுக்கு முன்னர் பெரும்பாலான திருமணங்கள் பெற்றோர்களால் மட்டுமே முடிவு செய்ய பட்டு வந்தது (இங்கும் பெற்றோர்களின் கணவுகளுக்கே இடம் உண்டு) , அங்கு மணமக்களின் விறுப்பங்கள் கேட்க படாமலே இருந்தது அதனால் நிறைய குடும்பங்கள் மனம் ஒப்பாமல் அதை நேரத்தில் பிரியாமலும் கடமையாக நினைத்து வாழ்வை ஓட்டியவர்கள் அதிகம். ஆனால் தற்ப்பொழுது இது போன்ற நிகழ்வுகள் மிக மிக குறைவே.

பல பல புரிதல்கள் காரனமாகவே இவை நிகழ்ந்தது, இது போன்ற புரிதல்கள் கல்வியில் எப்பொழுது நிகழும்? யார் இதற்க்கு பொறுப்பாளி?

மாணவன் தான் விரும்பும் கல்வியை , தனக்கு ஏற்ற கல்வியை தேர்வு செய்யும் உரிமையைய் எப்பொழுது பெறுவான். இதற்க்கு யார் காரணம்? கண்டிப்பாக பொற்றோர் அல்ல, வேறு யார்? என்னுடைய கருத்து இதற்க்கு முழுப்பொறுப்பும் மேல்நிலை கல்வி திட்டம் வகுத்த கல்வியாளர்களே காரணம், ஏனெனில் அங்கு தான் மாணவன் தன்னுடைய எதிர்காலம் பற்றிய சிந்தனை செய்ய வேண்டிய இடமாகும், இந்த இடத்தில் அவனுக்கு தன்னுடைய எண்ணம் என்ன , தகுதி என்ன , திறமை என்ன, செயல் என்ன, ஆற்ற்ல் என்ன போன்ற விசயங்களை நன்கு அறிந்து அதற்க்கு தேவையான கல்வி முறையை உணர்ந்து தேர்ந்து எடுக்க வேண்டிய நிலையில் உள்ளான். இதற்க்கு அவனுக்கு தேவையான அனைத்தையும் அவனுடைய கல்வி மட்டுமே வழங்க முடியும்.
ஒருவன் தன்னுடைய நிலையை (வளர்ச்சியை) அறிய தேவையான அறிவை தராத கல்வி அவனுக்கெதற்க்கு. என்று இத்தகய கல்வி முறை தரப்படுகிறதோ அன்று தான் நம் இளைய தலைமுறை தன்னிலை அறிந்து தன் தேவை உணர்ந்து, தனக்கானவ்ற்றை தானே தேடி தன் இருப்பை உலகில் நிறுத்தி தன் வாழ்க்கையை வாழத்தொடங்குவார்கள். அவ்வாறு வாழும் பொழுது அவர்களும் இவ்வுலகும் நல் வாழ்வு பெறும்.

Friday, 6 February 2015

எது சிறந்த யோகா?





எது சிறந்த யோகா?
 நமக்கு எந்த யோகா சிறந்த பலனை தறுகிறதோ அதுவே மிக சிறந்த யோகா ஆகும். அனைத்து விதமான யோக முறைகளின் குறிக்கோளும் ஒன்றே. ஆனால் ஒவ்வொருவரும் தனி தனி பலனையே அடைகிறார்கள் ஏனெனில் ஒவ்வொருவரும் தம்முள் இருந்தே ஆரம்பிப்பதால் இவ்வாறு தனி தனி பலன்களை அடைகிறார்கள். யோகாவின் முதன்மையான நோக்கம் பல ஆயிறம் ஆண்டுகளுக்கு முன்பே நன்கு வரையறுக்கப்பட்டு நிர்ணயிக்க பட்டு விட்டது. யோக கலையின் உண்மையான அர்த்தம் ஒற்றுமை. யோகாவில் ஒற்றுமை என்பது தனி மனிதணுடைய உள்ளுணர்வு மற்றும் விழிபுணர்வுடன் பிரபஞ்சத்தை பற்றிய விழிபுனர்வும் இனைந்த்து ஆகும். இதனால் ஏற்படும் பலன் என்னவென்றால் எப்பொழுதும் அழியாத மகிழ்சியே. ஒரு சிலர் அவர்களுடைய உடல் நிலை முன்னேற்றம், மன சோர்வு தீர என பல பயன்களை வேண்டி இந்த யோகாவை பயில வருகின்றனர். ஆனால் இவை அனைத்தும் யோகாவினால் கிடைக்கும் சில பயன்கள் மட்டுமே ஆனால் யோக கலையின் உண்மையான நோக்கம் எப்பொழுதும் அழியாத  நிரந்தரமான எப்போதும் நீடிக்கும் மகிழ்சியே ஆகும்.