Tuesday, 2 September 2014

இன்று நாம் யார்?



இன்று நாம் யார்?


இன்று நம்மிடம் உள்ள பல வழிகள் மூலம் நாம் எவ்வாரு பரினாம வளர்ச்சி அடைந்து உள்ளோம் என்பதை அரிய முடிகிறது. டார்வினின் கோட்பாட்டின் அடிப்படையில் நாம் அதன் உச்சத்தை அடைந்து இருக்க    வேண்டும். பொருளாதார, சமூக மற்றும் ஒழுக்க நிலையில் விளைந்த மாற்றத்தால், உளவியல் ரீதியாக நாம் குழப்பம் அடைந்து உள்ளோம்.
அறிவியல் பூர்வமாக நாம் ஆராய்ந்தால் இன்று நம்முடைய தொழில்நுட்ப வளர்ச்சிகள் உண்மையில் ம்முடைய வாழ்க்கையில்  மகிழ்ச்சியை அதிகரித்துள்ளதா என்பதே கேள்வி. ஒன்று நிச்சயம் ஆகிறது.  நம்முடைய தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உலக ஒழுங்கு முறைகளை நாம் அமைத்து கொள்வது என்ற ஒரு பொதுவான போக்கு உள்ளது.
 



இன்று நாம் என்னவா உள்ளோம்?
     நாம் நமது கடந்த கால தயாரிப்புகளாக உள்ளோம். கடந்த காலம் என்பது நம்முடைய  மரபு, கலாச்சாரம், சமூக மற்றும் சுற்றுச்சூழல் வகையில் நாம் அறிந்தோ அல்லது அறியாமலோ ஏற்பட்ட பல்வேறு அழுத்தங்களின் விளைவாக நாம் இருக்கிறோம். நம் மனதில் சிந்தனை கருவியாக உள்ளது. சிந்தனைகள் செயல்களை உருவாக்கின்றன. செயல்கள் மீண்டும் சிந்தனைகளை உருவாக்குகிறது. ஆகவே
 இன்று நாம் நம்முடைய சுபாவம், பாத்திரம், இலட்சியம், அபிலாஷைகளின் படிம பதிவுகளின் உருவகமாக உருவாகி உள்ளோம்.

We all know the well known quote:

“Sow a thought, reap an action;
 Sow an action, reap a habit;
 Sow a habit, reap a character;
 Sow a character, reap a destiny.”

எனவே, நாம் நமது கடந்த கால எண்ணங்கள் மற்றும் நடவடிக்கைகளில் இருந்து தற்போதய நிலையை அடைந்துள்ளோம். இதேபோல், நாம் தற்போது எதிர்காலத்தையும் வடிவமைக்க முடியும்.

No comments:

Post a Comment